இது எனது முதலாவது திரைப்பட கண்ணோட்டம். விமர்சனம் என்று நான் சொல்லமாட்டேன். ஏனெனில் விமர்சிக்க எனக்கு அனுபவம் போதாது என்று தான் நான் நினைக்கிறேன். முதலிலே ஆங்கிலப்படதை பற்றி எழுதுகின்றேன், தமிழை விட்டுவிட்டு என்று நினைக்காதீர்கள். நான் தமிழை விடவில்லை. தமிழ்ப்படத்தை பற்றி எழுத நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள் அதுதான்.
கேட்ச் மீ இப் யூ கேன்... இது அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மைக் சம்பவத்தை தழுவி Steven Spielberg இனால் இயக்கப்பட்ட ஒரு ஹாலிவுட் திரைப்படம். நான்கே நான்கு வருடங்களில் ஒரு 19 வயது நிரம்பிய பையன் எப்படி பல மில்லியன் பெறுமதியான தானே தயாரித்த செல்லுபடியாகாத வங்கிக்காசோலைகளை பல வங்கிகளில் காசாக மாற்றுகின்றான். அந்த காசோலைகளை மாற்றுவது மட்டும் அல்லாமல் ஒரு விமான ஓட்டுனனர் , வைத்தியர் மற்றும் ஒரு சட்ட வல்லுநர்ஆக இருந்து எவ்வாறு பலரையும் ஏமாற்றுகின்றான் என்பதே படத்தின் கதை.
இந்த படத்தில் நடித்த அனைவரது நடிப்பும் இயல்பாய் உள்ளது இந்த படத்திற்கு வலிமை சேர்க்கிறது. அத்துடன் படத்தில் சீரியஸ்ஸானா காட்சிகளையும் நகைச்சுவை உணர்வை தூண்டகூடிய வகையில் படமாக்கி இருப்பது இயக்குனரின் திறமை.
இந்த படத்தில் Frank Abagnale Jr. படத்தின் நாயகன் ஆக Leonardo DiCaprio யும் அவனை துரத்தும் FBI அதிகாரியான Carl Hanratty ஆக Tom Hanks உம் நடித்து உள்ளனர்.
2003 ஆண்டுக்கான 2 ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டது. மிகவும் சீரான வேகத்துடன் நகரும் திரைக்கதைக்காக இயக்குனரை மீண்டும் பாராட்டலாம்.
இந்த படத்தின் Trailer யும் இணைத்துள்ளேன்.
அத்துடன் இந்தப்படத்தை தரவிறக்கம் செய்ய Torrent சுட்டியும் இணைத்துள்ளேன்.
தரவிறக்க இங்கே சொடுக்கவும்.
இது எனது முதலாவது கண்ணோட்டம். எதாவது பிழைகள் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும். என்னை திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.
2 comments:
நானும் பல தடவை பார்த்த படம்.. டீ கப்ரியோவை விட ஹான்க்சைப் பிடித்திருந்தது..
தமிழின் தில்லாலங்கடி கூடக் கொஞ்சம் இந்தப் படத்தின் உல்டா தான்
நானும் பல தடவை பார்த்தும் சலிக்காத ஒரு படம்.
Post a Comment