Sunday, December 13, 2009

வினோதமான திருமண அழைப்பிதழ்

மின்னஞ்சல் மூலமாக நண்பனிடமிருந்து பெற்றதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்






படத்தை பெரிதாக்க படத்தின் மேல் சொடுக்கவும்

Wednesday, October 7, 2009

Tesco வில் 2 மணி நேரம்..............



எங்களுக்கு கோடை விடுமுறை முடிந்து UNI தொடங்கி இன்னும் ஒரு வார காலமும் ஆகவில்லை..... வீட்டில் இருந்த காரணத்தாலோ என்னமோ இன்னமும் படிப்பு பக்கம் மனது செல்லவில்லை......... எனது முதல் வருடத்திற்கு 2,3 பாடங்களை தெரிவு செய்தாகவேண்டும்.... அதனால் மிகுந்த குழப்பத்தின் மத்தியில் இருந்தேன்... அன்றைய வகுப்புக்களை முடித்து கொண்டு வீடு திரும்பினேன்..

மாலை 4 மணி போல் எனது கைபேசி அலறியது. மறுமுனையில் எனது நண்பன். ஒரு கண்டிப்பான வேண்டுகோளுடன் அவன்........
 "இண்ணிக்கு பின்னேரம் 7 மணிக்கு ரெடியா இரு. நாங்க சாப்பிட வெளியில போறம்" .  உடனடியாக சம்மதிக்கவில்லை என்றாலும் சிறிது நேரப் போராட்டதின் பின் நானும் சம்மதித்தேன்.. குழப்பமடைந்த மனது சிறிது சாந்தமடையும் என நம்பினேன்..........

மாலை 7 மணி, நான்,எனது நண்பன், அவனுடைய சீன நண்பன், அச் சீன நண்பனுடைய காரிலே செண்றோம்.... இராப்போசனத்தை முடித்தபின் சில பொருட்களை வாங்குவதற்கு TESCO செல்வோம் என அச்சீன நண்பன் கூறினான். அங்கே அவர்கள் தேவையான பொருட்களை வாங்கினார்கள்.
எனக்கு நீண்ட நாட்களாக வாங்க வேண்டி இருந்த சவர அலகின் ஞாபகம் வந்தது. தேடிப்பிடித்து வாங்கினேன். பில் போடுவதற்காக நீண்ட வரிசையில் நிண்டிருந்தோம்.........
ஒரு வழியாக 10-15 நிமிடத்தின் பின் பில் போட சந்தர்ப்பம் கிடைத்தது. முதலில் அச்சீன நண்பன், அடுத்து நான்,,,,,  அச்சவர அலகு ஓர் பிளாஸ்டிக் பெட்டியில் வந்தது. அப்பெட்டியை உடைக்க கவுண்டரில் நிண்டிருந்த பெண் சிரமப்பட்டாள். என்னை சிறிது நேரம் காத்திருக்க சொல்லி பெட்டியை உடைக்க அருகில் இருந்தவரை அழைத்தாள். நேரம் 5 , 10 , 15 என நீண்டு சென்றது. இறுதியில் ஒரு 30 நிமிடத்தின் பின் அந்ந பெண் என்னிடம் கேட்டாள்....
”பெட்டியை உடைக்க முடியவில்லை என்ன செய்வது??????”


நீங்களே சொல்லுங்கள் (இவர்களை) என்ன செய்வது????

பின்பு மேலும் 45-50 நேரம் காத்திருந்து பெட்டியை உடைப்பித்து வெளியேறியது வேறு கதை.........

Monday, September 21, 2009

வயிற்றில் மனச்சாட்சி

மின்னஞ்சலில் பெற்றவையை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்


















மற்றும் சில நகைச்சுவைகிடமான உண்மை சம்பவங்கள்














           கடைசியில் உள்ள படத்தில் எல்லாமே உணவுக்காகவே என உணர்ந்து விட்டார் போல் தெரிகின்றது.....

Tuesday, September 8, 2009

வணக்கம்


  அனைவருக்கும் எனது வணக்கங்கள் உரித்தாகட்டும்.
வலைப்பதிவுகளில் நானும் பதிவு இட வேண்டும் என்பது எனது நெடுநாள் ஆசை. அதற்காகவே வலைப்பதிவில் கணக்கினை ஆரம்பித்து சில வருடங்கள் உருண்டோடிவிட்டன....... இப்போது தான் அதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது........

அத்துடன் தமிழில் தட்டச்சு செய்வது இதுவே முதல் தடவை. எனவே ஏதாவது பிழைகள் காணப்பட்டால் பின்னுட்டல் பெருமக்கள் பொறுத்து அருள வேண்டும்.
மற்றும் உங்கள் வழிகாட்டல்களும் வரவேற்கப்படுகின்றன.......