Sunday, July 25, 2010

யாழ்ப்பாணம் ரயில் நிலையம்........

நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து 21 வருடங்கள் இந்த மண்ணிலே வளர்த்தவன். இப்பொது 2 வருடங்கள் கல்வி நிமிர்த்தம் மலேசியாவில் வசித்துவருகிறேன். சென்ற 2009 மே கோடை விடுமுறையில் யாழ் வந்து சென்றேன். அப்போது தான் நீண்ட நாட்களாக பாரமரிக்காமல் இருந்த என்னுடைய வலைப்பூவினை மீண்டும் எழுத தொடங்கிய நேரம்.

 மீண்டும் மலேசியா செல்ல A-9 ஊடாக  கொழும்பு செல்ல பயணத்தை ஆரம்பித்தேன். பயணம் ஆரம்பத்திலேயே களை கட்டியது. பஸ்சில் பயணிக்க நான் சென்று அடைந்த இடமோ ரயில் நிலையம். அப்போதே இதனை ஒரு பயண பதிவாக இட வேண்டும் என தோன்றியது. ஆனால் மலேசியா சென்று அடைந்தவுடன் மறந்துவிட்டேன். இடை இடையே நினைவு வரும், ஆயினும் நான் தமிழில் தட்டச்சு செய்யும் வேகம் மிக குறைவு. எனவே பதிவிடும் ஆவல் கனவாகவே இருந்தது. இப்போது மீண்டும் கோடை விடுமுறை நான் மீண்டும் யாழில். வீட்டில் அகல கற்றை  இணைய சேவை. எனவே கனாவை நனாவாக்கும் முயற்சி.

சிறு  பிள்ளையாக இருக்கும்போதே அப்பா சொல்லும் இரயில் கதைகளிலே மூழ்கிய  சம்பவங்கள் நிறைய உண்டு. அப்பா இரயில் ஏறி கொழும்பு சென்று படம் பார்த்து திரும்பிய கதைகள் நிறைய சொல்லவார். பேராதெனியாவில் தான் படித்த காலங்களில் இரயிலில் வரும்போது  நடந்தது  எல்லாம் சொல்லுவார்.  அப்போதே இரயில் என்றால் எனக்கு ஆர்வம் அதிகம். ஆனால் என் கெட்ட நேரம் நான் எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து இலங்கையில் ரயிலில் ஏறியது இல்லை.

அப்போதுதான் யாழில் இருந்து மீண்டும் பஸ் கொழும்புக்கு செல்ல ஆரம்பித்து இருந்தது. அதிகாலை பயணசீட்டுடன் யாழ்ப்பாண ரயில் நிலையம் சென்றேன். கூடவே என்னுடன் எனது அப்பாவும் வந்தார். மகனை தனியே அனுப்ப அவருக்கும் அம்மாவிற்கும் விருப்பம் இல்லை. பொதுவாக எனக்கு தனிய பிரயாணம் செய்யத்தான் விருப்பம் ஆனாலும் அப்பாவை விட்டு மீண்டும் ஒரு வருடம் பிரியபோகிறேன் எனவே நான் ஏதும் சொல்லவில்லை. அத்தோடு ஒரு ஆசையும் கூடத்தான் அப்பா கூட வந்தால் பழைய கதைகள் சொல்வார்.

இரயில் நிலையத்தில் இரயில் வரவில்லை. பஸ் தான் வந்தது. மக்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக நின்றார்கள். முன்னர் ஒரு போதும் இரயில் நிலையத்திற்கு அவ்வளவு அண்மையில் நான் சென்றது இல்லை. எனது உடல் படபடத்தது. ஏன் என்று எனக்கு புரியவில்லை. நீண்ட வரிசையில் பயணம் செய்பவர்கள் எல்லாம் நின்றுகொண்டிருந்தோம். அப்போது நான் அப்பாவின் வாயை கிண்டினேன்.

 
எதிர்பார்த்ததை போலவே பழைய கதைகள் பல வந்தன. இரசித்தேன், கவலைபட்டேன், ஏகப்பட்ட உணர்ச்சிகள் எனக்குள்ளே. சே நான் 1950 களில்  பிறந்து இருக்க கூடாத என்று வேறு எண்ணினேன். என் சொந்த நான் பிறந்த மண்ணிலே நான் ரயில் ஏறி இருப்பேனே. சுற்றி பார்த்தேன் தண்டவாளம் இருக்கவேண்டிய இடத்தில் புல் இருப்பதை உணர்த்தியது எனது பார்வை.



 பார்வையை திருப்பிய இடத்தில் எல்லாம் மனதுக்குள் இனம் புரியாத வருத்தம், ஏமாற்றம். சில பல புகைப்படங்களை எனது கைத்தொலைபேசியில் அடக்கம் செய்தேன்.





கவலையை மனதுக்குள் அடக்கிக்கொண்டு மீதி பயணத்தை தொடர்தேன் கொழும்பு மட்டும் இல்லை. வவுனியா மட்டும். எப்படியாவது வவுனியாவில் இருந்து கொழும்புக்கு இரயில் செல்ல வேண்டும் என தோன்றியது. முதல் முறை எனது சொந்த நாட்டில் ரயில் ஏறினேன். யாழ் ரயில் நிலையத்தில் காலை ஆரம்பித்த பயணம் மாலை மருதானை இரயில் நிலையத்தில் நிறைவுற்றது. மீண்டும் நம்பிக்கை உள்ளது ஒரு நாள் கொழும்பிலேயே ரயில் ஏறி யாழ்ப்பாணத்தில் ரயிலில் இறங்குவேன் என்று......

Tuesday, July 20, 2010

மனதை திருடிய தமிழ் திரைப்பாடல்கள்

சில பாடல்களை கேட்கும் போது மனது கவலைகளை மறப்பது உண்மை. . அவ்வாறு எனக்கு பிடித்த சில பாடல்களை இங்கு தருகிறேன்.

ஆஹா படத்தில் இருந்து ...........

முதல் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே........




சேது படத்தில் இருந்து.........

மாலை என் வேதனை கூட்டுதடி............




Monday, June 14, 2010

Facebook க்கு எந்த E-mail எக்கவுன்ட் சிறந்தது

  

  நான் Facebook தொடங்கிய காலத்தில் எல்லாம் மின் அஞ்சல் கணக்கு இருந்தும் Facebook கணக்கு இல்லாமல் இருந்தார்கள். இப்போது Facebook கணக்கு ஆரம்பிப்பதற்கு என்றே மின் அஞ்சல் கணக்கு ஆரம்பிகிறார்கள்.
    
     இந்த முறை கோடை விடுமுறைக்கு வீடு சென்றபோது எனது நண்பன் ஒருவன் என்னிடம் கேட்டான், தனக்கு Facebook Account வேணும். நல்ல நேரம் வீட்டில் இணைய இணைப்பு இருந்தது. எனவே அவனை அழைத்து வந்து Facebook  கணக்கு தொடங்க அவனுடைய மின் அஞ்சல் முகவரியை வினவினேன். அவனிடம் இருந்து பதில் வந்தது. Facebook க்கு E - mail address  வேணுமா?

  
   என்ன கொடுமை சார் இது? அப்போது தான் புரிந்தது அவனுக்கு மின் அஞ்சல் கணக்கு ஆரம்பிக்க தெரிந்து இருந்தால் என்னிடம் ஏன் கேட்க போகிறான் Facebook கணக்குக்கு.

  Facebook  எந்த அளவுக்கு இடத்தை பிடித்து விட்டது  பார்திர்களா?



 சரி இப்பொது தலைப்புக்கு வருகிறேன். எனது அனுபவத்தின் படி Facebook க்கு Gmail கணக்கு பாவிப்பது சிறந்து.

 எனக்கு கிட்ட தட்ட 1000 நண்பர்கள் உள்ளார்கள். பெருமளவானவர்கள் பல்கலைக்கழக நண்பர்களே. நேரம் போவதற்காக பெரும்பாலும் யாருடைய Facebook இல் Status க்கு comment பண்ணி விளையாடுவோம். குறிப்பிட்ட நபர் வந்து பார்க்கும் போது மின் அஞ்சல் கணக்கு Spam  ஆகி இருக்கும். சில தடவைகள் நானும் மாட்டி உள்ளேன்.

   அந்த நேரத்தில் நீங்கள் Gmail கணக்கு வைத்து இருந்தால். உங்களுடைய Facebook Notification எல்லாம் ஒவ்வொரு நண்பர்களுடைய பெயருக்கும் கீழே ஒழுங்காக வரிசைபடுத்த பட்டிருக்கும்.
   உதாரணமாக
ஒரு நண்பர் 10 Comment போட்டு இருந்தால் உங்களுக்கு 10  மின் அஞ்சல் வராது. ஒரு மின் அஞ்சலின் கீழே 10 Comment உம் தொகுத்து இருக்கும்.

எனவே ஸ்பாம் இன் அளவை குறைக்க முடியும்.

இது எனது கருத்து, வேறு கருத்துகள் இருந்தால் பின் ஊட்டத்தில் சொல்லவும்.