Thursday, May 31, 2012

அம்மா அப்பா!


நீண்ட காலமாக Blog பக்கம் வரவே இல்லை.. வாசிக்கிறதுக்கு வந்தன், எழுதுறதுக்கு வரவில்லை. கொஞ்சம் வேலை(நாங்கெல்லாம் Busyயாக்கும்). இப்ப Exam எல்லாம் முடிஞ்சுது so எனிமேலும் Busy என்டு சொல்ல ஏலாது! அப்ப blog பக்கம் வந்து ஒரு போஸ்ட் போடலாம் என்டு பார்த்தால், என்னத்த எழுதுவது என்று குழப்பமாக இருக்கின்றது. சரி எழுதுவதுக்கு ஒண்டும் இல்லாட்டியும் நாங்க இந்த Blog address ல உயிரோட இருக்கிறம் எண்டு காட்டுவதற்கு ஒரு Entry ஐ போட்டிடலாம் எண்டு யோசித்ததன் விளைவுதான் இந்த மொக்கை Post.



ஒரு வழியா அப்பா அம்மாவின் ஆசையை முடிச்சாச்சு! இரண்டு பேரும் எனக்காக விட்டுக்கொடுத்த சுக துக்கங்கள் ஏராளம். என்னிடம் இது வரை எதுவுமே கேட்டது கிடையாது. நான் கேட்டது எல்லாமே கிடைத்தது. ஆனால் என்னிடம் படிப்பு விசயத்தில் மட்டும் ஏராளமாக எதிர்பார்த்தார்கள். நியாயமான எதிர்பார்ப்புத்தான். ஆனால் எந்த நேரத்திலும் அதனையும் வெளிக்காட்டவில்லை. எனக்கும் வீட்டில் இருக்கும் வரை அதுவும் புரியவில்லை. A/L லில அவர்களை கொஞ்சம் கூடுதலாக ஏமாற்றிவிட்டோம் என்பது எனக்கு முடிந்த பின் தான் தெரிந்தது. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன். அப்போது எடுத்த முடிவுதான் அவர்களைச்சந்தோசப்படுத்த வேண்டும் என்று. நேற்று கடைசிப்பரீட்சை முடிந்ததும் அம்மா அப்பாவிற்கு phone பண்ணி சொன்னேன். Exam முடிஞ்சுது என்று சொல்லத்தான் எடுத்தேன். ஆனால் என்னை அறியாமல் மனதில் இருந்து வந்த வார்த்தை "Thanks! நீங்கள் இரண்டு பேரும் இல்லை என்றால், நான் இன்டைக்கு இந்த நிலையில இல்லை. உங்கள கஷ்டப்படுத்தினது எல்லாம் போதும். இனி நான் உங்கள கஷ்டப்பட விடமாட்டன்". எனக்கே தெரியேல்ல நான் அவ்வளவு Emotional ஆ கதைப்பன் என்டு. அப்போதும் இரண்டு பேரும் பெரிதாக ஒண்றும் சொல்லவில்லை,ஆனால் அவர்களின் குரலிலே ஒரு சந்தோசம் தெரிந்தது. இப்போதைக்கு எனக்கு அது போதும். முதல் முறையா எனக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை சந்தோசப்படுத்தி விட்டேன். மீண்டும் ஒரு தடவை "என்னை இந்த சமுதாயத்தில் போட்டி போடக்கூடிய அளவிற்கு ஆளாக்கியதற்கு (படிப்பு மட்டும் அல்லாமல் வாழ்க்கையை புரிய வைத்ததற்கு.) நன்றி அப்பா அம்மா!".

அப்பா அம்மாவைப்பற்றி எழுதிய பின் மொக்கைப் பதிவிற்கும் அர்த்தம் கிடைக்கின்றது பார்த்தீர்களா. அந்த இரண்டு வார்த்தைகளும் மந்திர வார்த்தைகள். வாழ்க்கைக்கு மட்டும் அர்த்தம் கிடைக்காமலா போய்விடும்.

மீண்டும் சந்திப்போம் ! வெகு விரைவில் .. புதிய பதிவுகளுடன்!!

Monday, July 18, 2011

பாட்டி சுட்ட வடையும் நுண்ணரசியலும்.......





மின்னஞ்சலில் கிடைக்கப்பெற்றது...... எல்லோருடனும் பகிரலாம் என்று எண்னினேன்...

ஆயா  சுட்ட வடை


கவிப் பேரரசு வைரமுத்து பாணியில்...


ஒரு ஊரில்...

புழுதி படிந்த ஒரு கிராமத்தில்...
 ஒரு ஆயா வடை சுட்டு விற்றுவந்துகிட்டிருந்தாங்க...

ஒரு யெளவனக் கிழவி  வடை சுட்டு விற்று வந்தாள். காசு பெற்று வந்தாள்....

அந்த  வடையை  எப்படியாவது திருடிவிட வேண்டும் என ஒரு காக்கா வந்து
உக்காந்திருச்சாம்.

அந்த கந்தக வடையை கவர்ந்து செல்ல அங்கே வந்தது ஒர் கார்மேக காகம்...

ஆயா அது தெரியாமல் வடை சுட்டு போட்டுகிட்டே இருந்திச்சாம்..

பாட்டிக்கு மட்டும் அந்த கார்மேக காகத்தின் கள்ள எண்ணம் தெரிந்திருந்தால்
அவளது கல்லரை பூக்கள் கூட அவளுக்காக கண்ணீர் சிந்தியிருக்காது...

ஆயா அசந்த நேரம் பார்த்து காக்கா வடையை தூக்கிக் கொண்டு போய்ட்டுதாம்...

பாட்டி பாராத சமயம்... பாட்டி பாராத சமயம்...  அந்த கார்மேக காகம் சந்தன
மின்னல் போல் பாய்ந்து அந்த கந்தக வடையை கவர்ந்து சென்றது...

 மரத்தின் மேல் போய் உக்கார்ந்திச்சாம்...

விதைக்குள் இருந்து வந்த விருட்சம் அங்கே வளர்ந்து நின்றது பல வருக்ஷம்..
அதன் சுந்தரக் கிளையினில் சென்று அமர்ந்தது அந்த சொர்ப்பனக் காகம்...

அப்போ திடீரென அங்கு ஒரு நரி வந்தது...

பூவுக்குள் பூகம்பம் போல் புறப்பட்டு வந்தது அந்த நரி... அந்த நரி
நர்த்தக நரி... நாளடியார் நரி... நீதியறிந்து போதி சொல்லும் போதி மரத்து
சாதி...(அப்பா நரிக்கு எவ்வளோ introduction)

காக்கா வைச்சிருந்த வடையை பார்த்துச்சாம்...

கார்மேக காகம் வைய்த்திருந்த வடையை அந்த நரி பார்த்தது... உடல் வியர்த்தது...

அந்த வடையை எப்படியாவது தான் தின்ன வேனும் என்று அந்த நரி திட்டம் போட்டுச்சாம்...

அந்த ராஜ வடையை அபகரிக்க அதன் நந்தவனத்து மூளை நாச வேலை ஒன்று செய்தது...

நரி அந்த மரத்தடிக்கு  சென்றது...

நரி அதுவாக சென்றது.காகம் இருந்த மரத்தடிக்கு மெதுவாக சென்றது...
காக்கா இதை கவனிக்கவில்லை...

ஆனால் அந்த கார்மேக காகமோ இச்சக அழகியாக எச்சம் கூட போட மறந்து அந்த
வீரிய வடையை தனது நேரிய விரல்களுக்கிடையே வைத்து அதன் கூர்மையை
சோதித்துக்கொண்டிருந்தது...

நரி சொல்லிச்சாம் காக்கா காக்கா நீ ரொம்ப அழகாயிருக்கிராய் ஒரு பாட்டு
பாடு என்டு...

நரி பகர்ந்தது ஓ உலக அழகியே...உள்ளூர் மொனலிசாவே...நகராட்சிப்
பூங்காவிற்குள் நுழைந்த நமீதாவே... அந்தபுறத்துக்குள் அத்துமீறி நுழைந்த
அக்ஷினே... தீவுத்திடளுக்குள் திடூம் என நுழைந்த திரீசாவே... நீ
பார்க்கவே எவ்வளவு அழகு... நீ மட்டும் உன் கந்தர்வக் குரலில் ஒரு கானம்
இசைத்தால்... ஒரு கானம் இசைத்தால் எருதுக்கும் விருது கிடைக்கும்...
சர்ப்பம் கூட கர்ப்பம் தரிக்கும்... ஏன் நீருக்கும் வியர்க்கும்
என்றது...

அதுக்கப்புறம் என்ன ஆச்சு என்கிறது தான் நமக்கு தெரியுமே...காக்கா பாட்டு
பாடிச்சுது... நரி வடையை எடுத்துக்கிட்டுது...

இல்லை... இந்த இடத்தில் தான் சரித்திரம் சரிகிறது... பூகோளம்
புறள்கிறது...தமிழ் தடுமாறுகிறது... நரியின் தேவ எண்ணத்திலே ஈட்டி
பாய்ந்தது... ஏனென்றால் காகம் என்ன பதில் எடுத்தது தெரியுமா?...

ஏய் நர்த்தக நரியே நான் பாட மாட்டேன்... ஏனென்றால்... நான் வைரமுத்துவின்
வாசலில் வளர்ந்த காகம்... நான் வைரமுத்துவின் வாசலில் வளர்ந்த காகம் ஆகவே
மெட்டு இல்லாமல் பாடமாடேன் என சொல்லி வடையுடன் பறந்து சென்றது...


குழும நண்பர்களே... பாசமுள்ள குழும நண்பர்களே

காகத்தின் உயிரில் வசந்தம் இனித்தது... மனதுக்குள் மழை
பொழிந்த்தது...அங்கே ஆனந்தங்கள் பரவசம்... அனுமதி இலவசம்...

கார்மேக காகத்தின் கதை என்னைப் பொறுத்தவரையில் ஒரு கருவாச்சி காவியம்...
கள்ளிக்காட்டு இதிகாசம்...

பாசமுள்ள குழும நண்பர்களே... உங்கள் பள்ளிகளிலோ... அல்லது
பல்கலைக்கழகங்களிலோ... இந்த கதையை பாடத்திட்டமாக்குவதற்கு பரிந்துரை
செய்யுங்கள்...



X-RAY REPORT
ஆயா  சுட்ட வடை

நடந்தது என்ன??????

ஆராய்கிறார் ஸ்ரீ-லங்காவின் பிரபல இராணுவ  செய்தி ஆய்வாளர்

பாட்டி வடை சுட்ட கதையின் நுண்ணரசியல்



இந்த கதையை மேலோட்டமாக படிக்காமல் உற்று கவனித்தால் இதில்
ஒளிந்திருக்கும் நுண்ணரசியல் புலப்படும். இந்த கதையில் வரும் காக்கா
தலையை பக்கவாட்டில் ஆட்டி வடையை சாப்பிடுவது இது ஒரு சைவ காக்கா என்று
புரிகிறது. தலையை மேலும் கீழும் ஆட்டிய நரி வைணவ சமயத்தை சேர்ந்தது.
அப்பாவி சைவ காக்கையை தந்திர வைணவ நரி ஏமாற்றியது சைவர்களை அப்பாவிகளாக
சித்தரிக்க உதவுகிறது. இதன் மூலம் கதை ஆசிரியர் வைணவத்துக்கு எதிராக
சைவத்தை தூக்கி பிடிக்கிறார் என்று தெரிகிறது. புரிகிறதா தோழ்ர்களே ?


மேலும் இந்த கதையில் கதை முழுவதும் மைய பாத்திரமாக வடை வருகிறது.
முன்பெல்லாம் கதைகளில் வைணவம் அதிகமாக வரும். இந்த கதையில் வரும் வடை சைவ
வடை. குறைந்தபட்சம் இடைவேளைக்கு பின் வடையை வைணவ போண்டா வாக மாற்றி
இருந்தால் கொஞ்சம் நடுநிலை இருந்திருக்கும். மணிரத்னம் கதைகளில் வடை ,
போண்டா இரண்டுமே சமமாக வரும்.


அத்துடன் இரண்டாயிரம் ஆண்டுகளாக நம்மிடையே ஊறிப்போன நிலபிரபுத்துவ
கூறுகளை உள்ளடக்கிய பொதுபுத்தி சிந்தனையின் குறியீடு இந்த வடை. வடை
என்பது எல்லாருக்கும் கிடைக்கும் பொருளும் இல்லை. மேல்தட்டு மற்றும்
நடுத்தட்டு வர்க்கத்தினருக்கு மட்டுமே வடை சாப்பிட சாத்தியப்படும். கதை
ஆசிரியர் தன் வர்க்க நலனை பாதுகாப்பதற்காக இங்கு வடையை உயர்த்தி
பிடிக்கிறார். இது புரியாமல் இந்த கதையை எல்லா வர்க்கத்தினரும்
முட்டாள்தனமாக தங்கள் பேரன் பேத்திக்கு சொல்லி வருகிறார்கள். இந்த
கதையில் பாட்டி என கஞ்சி காய்ச்சி இருக்கக்கூடாதுகஞ்சி குடித்தால்
நரியின் மூக்கு வெந்து விடுமாஇந்த வடை அரசியல் பற்றி 1852 இலேயே
எங்கெல்ஸ் எழுதியிருக்கிறார். புரட்சி வெடித்து தொழிலாள வர்க்கம் ஆட்சியை
கைப்பற்றும்போது கஞ்சி வடையாக மாறும். வடை கஞ்சியாக மாறும். சோவியத்
ரஷ்யாவில் வடை தடை செய்யப்பட்டதை இங்கு நினைவு கூறுங்கள்.






யப்பா வடைக்குள் எவ்வளவு அரசியல்......






Friday, July 8, 2011

புக்கிட் திங்கி (Bukit Tingi)

                       

                       சென்ற வருடம் மலேசியா சென்றவுடனே இரண்டாம் வருடம் தொடங்கும் முன்னர் சென்ற ஒரு நாள் வெளியிட பயணம். எனது நண்பனுக்கு அன்று பிறந்த தினம். முதல் நாளே புக்கிட் திங்கி போவதாக முடிவாகிவிட்டது. எனது நண்பனிடம் ஒரு கார் இருந்தமையால் அதிகாலை எழுந்து பிரயாண ஏற்பாடுகளை கவனிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. ஆனாலும் கொஞ்சம் காலைப்பொழுதே எழுந்து விடுவது தான் முடிவு. எங்களுடன் படிக்கும் வேறு சில நண்பர்களும் எங்களுடன் வருவதாக இருந்தது. காலை 8 மணிக்கு (அது வழமைக்கு மாறு தான், வழக்கமாக பகல் ஒரு மணிக்கு தான் எங்களுக்கு காலை விடியும்), எழுந்து கைபேசியை பார்த்தால் எங்களுடன் வருவதாக இருந்த மற்ற நண்பர்கள் தங்களால் வரமுடியாது என்று குறுங்செய்தி போட்டு இருந்தனர். பார்த்த உடனே எனது நண்பனின் அறைக்கதவை தட்டினேன். விசயத்தை சொன்னேன் எங்களுடன் வருவதுக்கு வேறு யாரவது அந்த நேரம் எழுந்துவிட்டார்களா என்று பார்த்தோம் ஒருவனை தவிர அனைவரும் தூக்கத்தில் இருந்தனர். சரி என்று அந்த நண்பனை ஒரு மணி நேரத்தில் வெளிக்கிட சொல்லி நாங்களும் வெளிக்கிட்டம்.

                        9 மணி போல பிரயாணம் ஆரம்பித்தது. மலேசியாவில் சாலை வசதிகள் மிகவும் நல்ல முறையில் இருப்பது எங்கள் பயணத்தை இலகுவாக்கியது. புக்கிட் திங்கி பெரும்பாலும் அனைவரும் அறிந்த கமரூன் ஹைலண்ட்ஸ் செல்லும் சாலையில் அதையும் தாண்டி செல்ல வேண்டும். எனது நண்பன் தனது சீன நண்பன் ஒருவன் மூலம் அந்த இடத்தைப்பற்றி அறிந்திருந்தான். அங்கு போகும் முதன் அங்கு இருக்கும் கட்டிடங்கள் ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்டு இருக்கும் என்று மட்டும் கேள்விபட்டது மட்டும்தான்.



                       புக்கிட் திங்கியை அடைந்ததும் அங்கு ஒரு வரவேற்ப்பு பலகை அங்கு உள்ள இடங்களை காண்பித்தது.


                        அங்கு முயல் பண்ணை, கோல்ப் விளையாடுத்திடல், குதிரை லாயம், பிரெஞ்சு கட்டிட கலையில் அமைந்த கட்டிடங்கள், ஜப்பானிய கட்டிட கலையில் அமைந்த கட்டிடங்கள் மற்றும் தாவரவியல் பூங்கா என்று பல இருந்தன. நாங்கள் எல்லாவற்றையும் பார்க்க நேரம் கிடைக்குமோ என்று எண்ணினோம். எனவே பார்ப்பதற்கு எல்லோருக்கும் பிடித்த இடங்களை தெரிவு செய்தோம்.

                         முதலில் முயல் பண்ணை நோக்கி எமது பயணம் அமைந்தது. பார்க்கும் போது மனதுக்கு இரம்மியமாய் இருந்தது. மென்மையான பிராணிகள் குளிர்மையான காலநிலை உங்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே அழைத்துச்செல்லும்.





                         மேலும் பிரெஞ்சுக்கட்டிடக்கலையில் அமைந்த கோட்டைகள் கொத்தளங்கள் என சுற்றுல்லா பயணிகளை கவரும் இடங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 










                         மேலே உள்ள இடத்தை பார்த்த பிறகுதான் மஜ்னு படத்தில் நான் ஐரோப்பிய நாட்டில் எடுத்த என்று எண்ணிய "குல்முஹர் மலரே" பாடல் உண்மையில் இங்குதான் படமாக்கப்பட்டது என்று புரிந்தது. சந்தேகம் இருந்தால் கீழுள்ள வீடியோவை பாருங்கள்.




                          அதையும் தாண்டி போகும் போது ஜப்பானிய முறையில் இயங்கும் ஒரு சிறிய தேனீர்ச்சாலை உண்டு. ஆனால் அது ஒரு மலை சரிவில் இருக்கிறது. நடந்துதான் போக வேண்டும். அங்கு சென்றால் சிறிய ஜப்பானிய முறையில் மரத்தாலான வீடுகளை காணலாம். அருவியின் கரையில் அமைக்கப்பட்ட வீடுகள் மிகவும் குளிர்மையாக இருந்தன. அங்கேயே படுத்து சிறிது நேரம் தூங்கவும் செய்தோம். 




                         மேலும் போனால் அங்கு தாவரவியல் பூங்கா, ஹெல்த் கேர் ஸ்பா என்பன உண்டு. கையில் கேமரா இல்லை. கைபேசியில் சுட்ட படங்கள் தான் அவை. கைபேசியில் பட்டரி இல்லாமல் அணைந்துவிட்டது. எனவே மேற்பட்டஇடங்களின் படங்களை தர முடியவில்லை. காலை தொடங்கிய பயணம் மீண்டும் வீடு திரும்ப இரவு மணி 10 ஐ தாண்டி இருந்தது. 

                         கோலாலம்பூரிலிருந்து ஒரு நாளில் சென்று திரும்பக்கூடிய இடம். வேகமாக நகரும் வாழ்கையின் வேகைத்தை குறைக்க வேண்டும் என்றால் சென்று வரலாம். மலேசியா போகும் போது நேரம் கிடைத்தால் போய் பாருங்கள்.


Thursday, July 7, 2011

பயனுள்ள ரேடியோ App!

 

       
                     இப்போது அநேகமானோர் சாதாரண வகைத் கைபேசியை விடுத்தது Smart Phone என்று அழைக்கப்படும் பெரும்பாலும் சகல வேலைகளையும் செய்யகூடிய வகை கைபேசியை உபயோகின்றனர்.  அப்படி பட்ட கைபேசியை உபயோகிக்கும் போது, வானொலி நிகழ்சிகளை கேட்க ஒரு நல்ல செயலி இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா!



                     இணையத்தில் சகல வானொலி நிலையங்களையும் ஒரே இடத்தில் கேட்க அனைவருக்கும் தெரிந்த ஒரு தளம் தான் TuneIn .


                        இப்போது இந்த தளம் முன்னணி கைபேசி வகைகளுக்கு ஒரு செயலி அமைத்துள்ளது. எனக்கு தெரிந்த வரை IOS மற்றும் Android தளங்களில் இயங்கும் கைபேசிகளும் சாதனைகளும் இந்த செயலியை உபயோகிக்கலாம்.

IOS இயங்குதளங்களுக்கு - App Store



                       இந்த செயலி Apple App Store இல் கிடைக்கிறது. இரண்டு வகைகள் உண்டு. இலவசமானது மற்றையது 0.99 USD பெறுமதியானது. இலவசமானதில் வானொலி நிகழ்சிகளை ஒலிப்பதிவு செய்வது, தானாக இயங்க வைப்பது போன்ற வசதிகள் இல்லை. கட்டணம் செலுத்துவதில் மேற்கண்ட வசதிகள் உண்டு. 


Android இயங்குதளங்களுக்கு - Android Market

                         இந்த செயலியும் Android Market இல் கிடைக்கிறது. இங்கும் இலவசமானது மற்றும் கட்டணம் செலுத்துவது என்று இரண்டு வகை கிடைக்கிறது. நான் உபயோகித்து பார்காதபடியால் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. உபயோகித்தவர்கள் சொல்லவும்.



                       இந்த செயலியில் வானொலியை பல்வேறு பட்ட வகையில் வகைப்படுத்தி வைத்திருப்பது உபயோகிக்க இலகுவாக உள்ளது. GPS இற்கு இணைப்பு இருப்பதால் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலிகளை அந்த வகையில் வகைப்படுத்தும். மேலும் மொழி, நாடு மற்றும் இசை வகை என்றும் வானொலிகளை வகைப்படுத்தலாம். எனவே உபயோகிக்க இலகுவாக இருக்கும்.

         ஆனால் உபயோகிப்பதற்கு ஒரு இணைய இணைப்பு அவசியம்

கேட்ச் மீ இப் யூ கேன். (Catch Me If You Can - 2002).

                    


                           இது எனது முதலாவது திரைப்பட கண்ணோட்டம். விமர்சனம் என்று நான் சொல்லமாட்டேன். ஏனெனில் விமர்சிக்க எனக்கு அனுபவம் போதாது என்று தான் நான் நினைக்கிறேன். முதலிலே ஆங்கிலப்படதை பற்றி எழுதுகின்றேன், தமிழை விட்டுவிட்டு என்று நினைக்காதீர்கள். நான் தமிழை விடவில்லை. தமிழ்ப்படத்தை பற்றி எழுத நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள் அதுதான்.

                    கேட்ச் மீ இப் யூ கேன்... இது அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மைக் சம்பவத்தை தழுவி Steven Spielberg இனால் இயக்கப்பட்ட ஒரு ஹாலிவுட் திரைப்படம். நான்கே நான்கு வருடங்களில் ஒரு 19 வயது நிரம்பிய பையன் எப்படி பல மில்லியன் பெறுமதியான தானே தயாரித்த செல்லுபடியாகாத வங்கிக்காசோலைகளை பல வங்கிகளில் காசாக மாற்றுகின்றான். அந்த காசோலைகளை மாற்றுவது மட்டும் அல்லாமல் ஒரு விமான ஓட்டுனனர் , வைத்தியர் மற்றும் ஒரு சட்ட வல்லுநர்ஆக இருந்து எவ்வாறு பலரையும் ஏமாற்றுகின்றான் என்பதே படத்தின் கதை.



                           இந்த படத்தில் நடித்த அனைவரது நடிப்பும் இயல்பாய் உள்ளது இந்த படத்திற்கு வலிமை சேர்க்கிறது. அத்துடன் படத்தில் சீரியஸ்ஸானா காட்சிகளையும் நகைச்சுவை உணர்வை தூண்டகூடிய வகையில் படமாக்கி இருப்பது இயக்குனரின் திறமை.
                       
               இந்த படத்தில் Frank Abagnale Jr.   படத்தின் நாயகன்  ஆக Leonardo DiCaprio யும் அவனை துரத்தும் FBI அதிகாரியான Carl Hanratty ஆக Tom Hanks உம் நடித்து உள்ளனர்.

                             2003 ஆண்டுக்கான 2 ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டது.  மிகவும் சீரான வேகத்துடன் நகரும் திரைக்கதைக்காக இயக்குனரை மீண்டும் பாராட்டலாம்.

இந்த படத்தின் Trailer யும் இணைத்துள்ளேன்.


அத்துடன் இந்தப்படத்தை தரவிறக்கம் செய்ய Torrent சுட்டியும் இணைத்துள்ளேன்.  

தரவிறக்க இங்கே சொடுக்கவும்.
படத்தின் imdb சுட்டி இங்கே

இது எனது முதலாவது கண்ணோட்டம். எதாவது பிழைகள் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும். என்னை திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.