Thursday, July 7, 2011

கேட்ச் மீ இப் யூ கேன். (Catch Me If You Can - 2002).

                    


                           இது எனது முதலாவது திரைப்பட கண்ணோட்டம். விமர்சனம் என்று நான் சொல்லமாட்டேன். ஏனெனில் விமர்சிக்க எனக்கு அனுபவம் போதாது என்று தான் நான் நினைக்கிறேன். முதலிலே ஆங்கிலப்படதை பற்றி எழுதுகின்றேன், தமிழை விட்டுவிட்டு என்று நினைக்காதீர்கள். நான் தமிழை விடவில்லை. தமிழ்ப்படத்தை பற்றி எழுத நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள் அதுதான்.

                    கேட்ச் மீ இப் யூ கேன்... இது அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மைக் சம்பவத்தை தழுவி Steven Spielberg இனால் இயக்கப்பட்ட ஒரு ஹாலிவுட் திரைப்படம். நான்கே நான்கு வருடங்களில் ஒரு 19 வயது நிரம்பிய பையன் எப்படி பல மில்லியன் பெறுமதியான தானே தயாரித்த செல்லுபடியாகாத வங்கிக்காசோலைகளை பல வங்கிகளில் காசாக மாற்றுகின்றான். அந்த காசோலைகளை மாற்றுவது மட்டும் அல்லாமல் ஒரு விமான ஓட்டுனனர் , வைத்தியர் மற்றும் ஒரு சட்ட வல்லுநர்ஆக இருந்து எவ்வாறு பலரையும் ஏமாற்றுகின்றான் என்பதே படத்தின் கதை.



                           இந்த படத்தில் நடித்த அனைவரது நடிப்பும் இயல்பாய் உள்ளது இந்த படத்திற்கு வலிமை சேர்க்கிறது. அத்துடன் படத்தில் சீரியஸ்ஸானா காட்சிகளையும் நகைச்சுவை உணர்வை தூண்டகூடிய வகையில் படமாக்கி இருப்பது இயக்குனரின் திறமை.
                       
               இந்த படத்தில் Frank Abagnale Jr.   படத்தின் நாயகன்  ஆக Leonardo DiCaprio யும் அவனை துரத்தும் FBI அதிகாரியான Carl Hanratty ஆக Tom Hanks உம் நடித்து உள்ளனர்.

                             2003 ஆண்டுக்கான 2 ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டது.  மிகவும் சீரான வேகத்துடன் நகரும் திரைக்கதைக்காக இயக்குனரை மீண்டும் பாராட்டலாம்.

இந்த படத்தின் Trailer யும் இணைத்துள்ளேன்.


அத்துடன் இந்தப்படத்தை தரவிறக்கம் செய்ய Torrent சுட்டியும் இணைத்துள்ளேன்.  

தரவிறக்க இங்கே சொடுக்கவும்.
படத்தின் imdb சுட்டி இங்கே

இது எனது முதலாவது கண்ணோட்டம். எதாவது பிழைகள் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும். என்னை திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.


                     

பூச்சாண்டியின் காஞ்சோண்டி களம்

                 


                  மீண்டும் நீண்ட நாட்களின் பின் வலைப்பூவிற்குள் வந்தேன், காரணம் நானாக எழுத இல்லை. எனது நண்பனின் வேண்டுகோளுக்கிணங்க. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட போட்டி காரணமாக தானும் வலைப்பூவில் இணைய போவதாக கூறிவிட்டான். அப்பொழுதே கூறினேன் போட்டி போடுவது என்றால் ஒவ்வொரு நாளும் பதிவிடுபவோரடு போட்டி போடு என்று. பாசக்காரன் இல்லை என்னோடுதான் போட்டி போடுவேன் என்கிறான். இந்த கொடுமைய வேற எங்க போய் நான் சொல்வது.

                   அதில ஒரு உதவி வேற கேக்கிறான், தான் வலைப்பதிவு தொடங்குறது சம்மந்தமா ஒரு பதிவு போடட்டாம். என்ன கொடுமை சார் இது. 

                   சரி, இப்ப நான் தலைப்புக்கு வாறன். அவரோட தொடங்க போற வலைப்பதிவின் தலைப்பு தான் காஞ்சோண்டி களம் அவரின்ட பெயர் கவிஞர் பூச்சாண்டியாம்.   வாசிக்கும்போது கடிக்காமல் இருந்தால் சரி. ஒவ்வொரு நாளும் கவிதை சொல்லி சொல்லி கடிக்கிறான். இனி வலைப்பூக்கள் இருக்கிறவையும் கடி வாங்க போகினம். 

என்னதான் இருந்தாலும் ஒரு நண்பானாக வரவேற்கின்றேன்.... 

தொடங்கிய பின்னர் இணைப்பு சுட்டி தருகின்றேன்....

நண்பேண்டாடாடாடாடா...................


ஒரு  சின்ன மாற்றம்....  சிங்கம் தனது வலைப்பூவினுடைய தலைப்பையும் தனது பெயரையும் மாற்றம் செய்து விட்டது.  



இப்போது வலைப்பூவின்னுடைய பெயர் பூச்சாண்டி யாம்.
தனது  சொந்த பெயருடனே ஆரம்பித்துள்ளார்.  

வலைபூவினுடைய முகவரி ::: http://kanchodi.blogspot.com/

உயிர் மேலஆசை இருந்தால் தயவுசெய்து மேலுள்ள சுட்டியை சொடுக்கவேண்டாம்......



Sunday, April 17, 2011

Excuse me Boss You got a text message


Got Via Google Buzzz!!!
Thought of sharing!!



Excuse me Boss. You got a text message
அதிர்ந்த மொபைலை எடுத்து பார்த்தான் மதன்.
“good night baby, Sweet dreams”

சங்கீதாவிடம் இருந்த வந்த மெசெஜை படித்தவன் அவளை அழைத்தான். ”சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்”. இவனுக்காக ஸ்பெஷலாக வைத்திருந்த ஹலோ ட்யூன் இரவு நேரத்தில் இனிமையாய் ஒலித்தது. பேச்சினூடே சிச்சுவேஷன் அப்படியே “சங்கீத ஸ்வரங்கள்” பாடலுக்கு ஏற்ப மாறியது. அவர்கள் பேசிவிட்டு வைத்தபோது மணி அதிகாலை 4.30 தாண்டியிருந்தது.
மதனும் சங்கீதாவும் 4 வருட காதலர்கள். எல்லோருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றால் இவர்களுக்கு மட்டும் 12 மணி நேரம்தான். மிச்ச நேரம் கிரகாம்பெல் கண்டுபிடிப்பின் நவீன வஸ்துவிலே சென்றுவிடும்.
Good morning ammu.
மதியம் 12.30க்கு குட் மர்னிங் சொல்லிக் கொள்ளும் இருவர் இவர்களாக மட்டுமே இருக்கக்கூடும். மீண்டும் சாணக்யா. மீண்டும் சங்கீத ஸ்வரங்கள். மீண்டும் குட் மார்னிங் . மீண்டும் குட் நைட் என நீண்டது அவர்கள் காதல்.
ஒருநாள் மழையிரவில் சற்றே மயக்க நிலையில் இருந்தான் மதன். வழக்கமாக மெசெஜ் வரும் நேரம் கடந்துவிட கண்ணயர்ந்தான். தூக்கம் எப்போது வந்தது என்றறியா வண்ணம் உறங்கியும் போனான். அதிகாலை 8 மணிக்கு.. அவனுக்கு அதிகாலைதானே?. அதிகாலை 8 மணிக்கு மதனின் அலைபேசி அலறியது. சங்கீதாவின் வீட்டில் இருந்து வந்தது அந்த அழைப்பு. மதனின் முகம் சங்கீதாவின் உள்ளங்கை கணக்காக சிவந்து போனது. கையில் கிடைத்தை சட்டை, பேண்ட்டை எடுத்தணிந்தவன் பல்சரை முறுக்கியதில் 6 வினாடிகளிலே 80ஐ கடந்தது.
மதன் அந்த மருத்துவமனையை அடைந்த போது எதிரே ஸ்ட்ரெச்சரில் ஒருவரை முழுவதும் போர்த்தியபடி எடுத்துச் சென்றார்கள். கலங்கிய கண்களுடன் சங்கீதாவின் அம்மாவை அழைக்க மொபைலை எடுத்தான். படிக்கப்படாமலே இருந்த ஒரு மெசெஜ் அவன் கண்களில் பட்டது. திறந்தான்.
”Darling. I am just outside ur home. Met with an aacident. Want to see u once. I am dying. Plz come fast”
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
மதன் கத்திய சத்தத்தில் மருத்துவமனையே ஒரு நொடி ஸ்தம்பித்து போனது. சங்கீதாவின் அம்மா மதனைத் தாண்டி சென்ற ஸ்ட்ரெச்சரை நோக்கி ஓடினார். புரிந்துக் கொண்ட மதன் சத்தம் போட்டு திட்டினான்








ங்கொய்யால. சாவும் போது கூட எஸ்.எம்.எஸ் தான் அனுப்பிவியா?????

Sunday, July 25, 2010

யாழ்ப்பாணம் ரயில் நிலையம்........

நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து 21 வருடங்கள் இந்த மண்ணிலே வளர்த்தவன். இப்பொது 2 வருடங்கள் கல்வி நிமிர்த்தம் மலேசியாவில் வசித்துவருகிறேன். சென்ற 2009 மே கோடை விடுமுறையில் யாழ் வந்து சென்றேன். அப்போது தான் நீண்ட நாட்களாக பாரமரிக்காமல் இருந்த என்னுடைய வலைப்பூவினை மீண்டும் எழுத தொடங்கிய நேரம்.

 மீண்டும் மலேசியா செல்ல A-9 ஊடாக  கொழும்பு செல்ல பயணத்தை ஆரம்பித்தேன். பயணம் ஆரம்பத்திலேயே களை கட்டியது. பஸ்சில் பயணிக்க நான் சென்று அடைந்த இடமோ ரயில் நிலையம். அப்போதே இதனை ஒரு பயண பதிவாக இட வேண்டும் என தோன்றியது. ஆனால் மலேசியா சென்று அடைந்தவுடன் மறந்துவிட்டேன். இடை இடையே நினைவு வரும், ஆயினும் நான் தமிழில் தட்டச்சு செய்யும் வேகம் மிக குறைவு. எனவே பதிவிடும் ஆவல் கனவாகவே இருந்தது. இப்போது மீண்டும் கோடை விடுமுறை நான் மீண்டும் யாழில். வீட்டில் அகல கற்றை  இணைய சேவை. எனவே கனாவை நனாவாக்கும் முயற்சி.

சிறு  பிள்ளையாக இருக்கும்போதே அப்பா சொல்லும் இரயில் கதைகளிலே மூழ்கிய  சம்பவங்கள் நிறைய உண்டு. அப்பா இரயில் ஏறி கொழும்பு சென்று படம் பார்த்து திரும்பிய கதைகள் நிறைய சொல்லவார். பேராதெனியாவில் தான் படித்த காலங்களில் இரயிலில் வரும்போது  நடந்தது  எல்லாம் சொல்லுவார்.  அப்போதே இரயில் என்றால் எனக்கு ஆர்வம் அதிகம். ஆனால் என் கெட்ட நேரம் நான் எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து இலங்கையில் ரயிலில் ஏறியது இல்லை.

அப்போதுதான் யாழில் இருந்து மீண்டும் பஸ் கொழும்புக்கு செல்ல ஆரம்பித்து இருந்தது. அதிகாலை பயணசீட்டுடன் யாழ்ப்பாண ரயில் நிலையம் சென்றேன். கூடவே என்னுடன் எனது அப்பாவும் வந்தார். மகனை தனியே அனுப்ப அவருக்கும் அம்மாவிற்கும் விருப்பம் இல்லை. பொதுவாக எனக்கு தனிய பிரயாணம் செய்யத்தான் விருப்பம் ஆனாலும் அப்பாவை விட்டு மீண்டும் ஒரு வருடம் பிரியபோகிறேன் எனவே நான் ஏதும் சொல்லவில்லை. அத்தோடு ஒரு ஆசையும் கூடத்தான் அப்பா கூட வந்தால் பழைய கதைகள் சொல்வார்.

இரயில் நிலையத்தில் இரயில் வரவில்லை. பஸ் தான் வந்தது. மக்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக நின்றார்கள். முன்னர் ஒரு போதும் இரயில் நிலையத்திற்கு அவ்வளவு அண்மையில் நான் சென்றது இல்லை. எனது உடல் படபடத்தது. ஏன் என்று எனக்கு புரியவில்லை. நீண்ட வரிசையில் பயணம் செய்பவர்கள் எல்லாம் நின்றுகொண்டிருந்தோம். அப்போது நான் அப்பாவின் வாயை கிண்டினேன்.

 
எதிர்பார்த்ததை போலவே பழைய கதைகள் பல வந்தன. இரசித்தேன், கவலைபட்டேன், ஏகப்பட்ட உணர்ச்சிகள் எனக்குள்ளே. சே நான் 1950 களில்  பிறந்து இருக்க கூடாத என்று வேறு எண்ணினேன். என் சொந்த நான் பிறந்த மண்ணிலே நான் ரயில் ஏறி இருப்பேனே. சுற்றி பார்த்தேன் தண்டவாளம் இருக்கவேண்டிய இடத்தில் புல் இருப்பதை உணர்த்தியது எனது பார்வை.



 பார்வையை திருப்பிய இடத்தில் எல்லாம் மனதுக்குள் இனம் புரியாத வருத்தம், ஏமாற்றம். சில பல புகைப்படங்களை எனது கைத்தொலைபேசியில் அடக்கம் செய்தேன்.





கவலையை மனதுக்குள் அடக்கிக்கொண்டு மீதி பயணத்தை தொடர்தேன் கொழும்பு மட்டும் இல்லை. வவுனியா மட்டும். எப்படியாவது வவுனியாவில் இருந்து கொழும்புக்கு இரயில் செல்ல வேண்டும் என தோன்றியது. முதல் முறை எனது சொந்த நாட்டில் ரயில் ஏறினேன். யாழ் ரயில் நிலையத்தில் காலை ஆரம்பித்த பயணம் மாலை மருதானை இரயில் நிலையத்தில் நிறைவுற்றது. மீண்டும் நம்பிக்கை உள்ளது ஒரு நாள் கொழும்பிலேயே ரயில் ஏறி யாழ்ப்பாணத்தில் ரயிலில் இறங்குவேன் என்று......

Tuesday, July 20, 2010

மனதை திருடிய தமிழ் திரைப்பாடல்கள்

சில பாடல்களை கேட்கும் போது மனது கவலைகளை மறப்பது உண்மை. . அவ்வாறு எனக்கு பிடித்த சில பாடல்களை இங்கு தருகிறேன்.

ஆஹா படத்தில் இருந்து ...........

முதல் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே........




சேது படத்தில் இருந்து.........

மாலை என் வேதனை கூட்டுதடி............