Thursday, May 31, 2012

அம்மா அப்பா!


நீண்ட காலமாக Blog பக்கம் வரவே இல்லை.. வாசிக்கிறதுக்கு வந்தன், எழுதுறதுக்கு வரவில்லை. கொஞ்சம் வேலை(நாங்கெல்லாம் Busyயாக்கும்). இப்ப Exam எல்லாம் முடிஞ்சுது so எனிமேலும் Busy என்டு சொல்ல ஏலாது! அப்ப blog பக்கம் வந்து ஒரு போஸ்ட் போடலாம் என்டு பார்த்தால், என்னத்த எழுதுவது என்று குழப்பமாக இருக்கின்றது. சரி எழுதுவதுக்கு ஒண்டும் இல்லாட்டியும் நாங்க இந்த Blog address ல உயிரோட இருக்கிறம் எண்டு காட்டுவதற்கு ஒரு Entry ஐ போட்டிடலாம் எண்டு யோசித்ததன் விளைவுதான் இந்த மொக்கை Post.



ஒரு வழியா அப்பா அம்மாவின் ஆசையை முடிச்சாச்சு! இரண்டு பேரும் எனக்காக விட்டுக்கொடுத்த சுக துக்கங்கள் ஏராளம். என்னிடம் இது வரை எதுவுமே கேட்டது கிடையாது. நான் கேட்டது எல்லாமே கிடைத்தது. ஆனால் என்னிடம் படிப்பு விசயத்தில் மட்டும் ஏராளமாக எதிர்பார்த்தார்கள். நியாயமான எதிர்பார்ப்புத்தான். ஆனால் எந்த நேரத்திலும் அதனையும் வெளிக்காட்டவில்லை. எனக்கும் வீட்டில் இருக்கும் வரை அதுவும் புரியவில்லை. A/L லில அவர்களை கொஞ்சம் கூடுதலாக ஏமாற்றிவிட்டோம் என்பது எனக்கு முடிந்த பின் தான் தெரிந்தது. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன். அப்போது எடுத்த முடிவுதான் அவர்களைச்சந்தோசப்படுத்த வேண்டும் என்று. நேற்று கடைசிப்பரீட்சை முடிந்ததும் அம்மா அப்பாவிற்கு phone பண்ணி சொன்னேன். Exam முடிஞ்சுது என்று சொல்லத்தான் எடுத்தேன். ஆனால் என்னை அறியாமல் மனதில் இருந்து வந்த வார்த்தை "Thanks! நீங்கள் இரண்டு பேரும் இல்லை என்றால், நான் இன்டைக்கு இந்த நிலையில இல்லை. உங்கள கஷ்டப்படுத்தினது எல்லாம் போதும். இனி நான் உங்கள கஷ்டப்பட விடமாட்டன்". எனக்கே தெரியேல்ல நான் அவ்வளவு Emotional ஆ கதைப்பன் என்டு. அப்போதும் இரண்டு பேரும் பெரிதாக ஒண்றும் சொல்லவில்லை,ஆனால் அவர்களின் குரலிலே ஒரு சந்தோசம் தெரிந்தது. இப்போதைக்கு எனக்கு அது போதும். முதல் முறையா எனக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை சந்தோசப்படுத்தி விட்டேன். மீண்டும் ஒரு தடவை "என்னை இந்த சமுதாயத்தில் போட்டி போடக்கூடிய அளவிற்கு ஆளாக்கியதற்கு (படிப்பு மட்டும் அல்லாமல் வாழ்க்கையை புரிய வைத்ததற்கு.) நன்றி அப்பா அம்மா!".

அப்பா அம்மாவைப்பற்றி எழுதிய பின் மொக்கைப் பதிவிற்கும் அர்த்தம் கிடைக்கின்றது பார்த்தீர்களா. அந்த இரண்டு வார்த்தைகளும் மந்திர வார்த்தைகள். வாழ்க்கைக்கு மட்டும் அர்த்தம் கிடைக்காமலா போய்விடும்.

மீண்டும் சந்திப்போம் ! வெகு விரைவில் .. புதிய பதிவுகளுடன்!!

3 comments:

ம.தி.சுதா said...

ஆமாம் ஆனால் அப்பா அம்மா பற்றி எழுதப்பட்ட எதையும் மொக்கைப் பதிவு என்று என்னால் சொல்ல முடியாது...

Jay said...

மிக்க நன்று நண்பரே. வாசிக்கும் போதே கண்கள் கலங்கிவிட்டது. உண்மயே. எங்களுக்காக அவர்கள் செய்த தியாகம், விட்டுக்கொடுப்பு இன்னும் பல பல அவை உலகில் வேறு யாரும் செய்யவே மாட்டார்கள்.

அசால்ட் ஆறுமுகம் said...

நன்றி சுதா மற்றும் மயூரேசன்....

சுதா///

அதுதான் சொன்னேன்.. அவர்களைப்பற்றி எழுதியமையால், இனிமேலும் இது மொக்கை இல்லை..