Monday, July 18, 2011

பாட்டி சுட்ட வடையும் நுண்ணரசியலும்.......





மின்னஞ்சலில் கிடைக்கப்பெற்றது...... எல்லோருடனும் பகிரலாம் என்று எண்னினேன்...

ஆயா  சுட்ட வடை


கவிப் பேரரசு வைரமுத்து பாணியில்...


ஒரு ஊரில்...

புழுதி படிந்த ஒரு கிராமத்தில்...
 ஒரு ஆயா வடை சுட்டு விற்றுவந்துகிட்டிருந்தாங்க...

ஒரு யெளவனக் கிழவி  வடை சுட்டு விற்று வந்தாள். காசு பெற்று வந்தாள்....

அந்த  வடையை  எப்படியாவது திருடிவிட வேண்டும் என ஒரு காக்கா வந்து
உக்காந்திருச்சாம்.

அந்த கந்தக வடையை கவர்ந்து செல்ல அங்கே வந்தது ஒர் கார்மேக காகம்...

ஆயா அது தெரியாமல் வடை சுட்டு போட்டுகிட்டே இருந்திச்சாம்..

பாட்டிக்கு மட்டும் அந்த கார்மேக காகத்தின் கள்ள எண்ணம் தெரிந்திருந்தால்
அவளது கல்லரை பூக்கள் கூட அவளுக்காக கண்ணீர் சிந்தியிருக்காது...

ஆயா அசந்த நேரம் பார்த்து காக்கா வடையை தூக்கிக் கொண்டு போய்ட்டுதாம்...

பாட்டி பாராத சமயம்... பாட்டி பாராத சமயம்...  அந்த கார்மேக காகம் சந்தன
மின்னல் போல் பாய்ந்து அந்த கந்தக வடையை கவர்ந்து சென்றது...

 மரத்தின் மேல் போய் உக்கார்ந்திச்சாம்...

விதைக்குள் இருந்து வந்த விருட்சம் அங்கே வளர்ந்து நின்றது பல வருக்ஷம்..
அதன் சுந்தரக் கிளையினில் சென்று அமர்ந்தது அந்த சொர்ப்பனக் காகம்...

அப்போ திடீரென அங்கு ஒரு நரி வந்தது...

பூவுக்குள் பூகம்பம் போல் புறப்பட்டு வந்தது அந்த நரி... அந்த நரி
நர்த்தக நரி... நாளடியார் நரி... நீதியறிந்து போதி சொல்லும் போதி மரத்து
சாதி...(அப்பா நரிக்கு எவ்வளோ introduction)

காக்கா வைச்சிருந்த வடையை பார்த்துச்சாம்...

கார்மேக காகம் வைய்த்திருந்த வடையை அந்த நரி பார்த்தது... உடல் வியர்த்தது...

அந்த வடையை எப்படியாவது தான் தின்ன வேனும் என்று அந்த நரி திட்டம் போட்டுச்சாம்...

அந்த ராஜ வடையை அபகரிக்க அதன் நந்தவனத்து மூளை நாச வேலை ஒன்று செய்தது...

நரி அந்த மரத்தடிக்கு  சென்றது...

நரி அதுவாக சென்றது.காகம் இருந்த மரத்தடிக்கு மெதுவாக சென்றது...
காக்கா இதை கவனிக்கவில்லை...

ஆனால் அந்த கார்மேக காகமோ இச்சக அழகியாக எச்சம் கூட போட மறந்து அந்த
வீரிய வடையை தனது நேரிய விரல்களுக்கிடையே வைத்து அதன் கூர்மையை
சோதித்துக்கொண்டிருந்தது...

நரி சொல்லிச்சாம் காக்கா காக்கா நீ ரொம்ப அழகாயிருக்கிராய் ஒரு பாட்டு
பாடு என்டு...

நரி பகர்ந்தது ஓ உலக அழகியே...உள்ளூர் மொனலிசாவே...நகராட்சிப்
பூங்காவிற்குள் நுழைந்த நமீதாவே... அந்தபுறத்துக்குள் அத்துமீறி நுழைந்த
அக்ஷினே... தீவுத்திடளுக்குள் திடூம் என நுழைந்த திரீசாவே... நீ
பார்க்கவே எவ்வளவு அழகு... நீ மட்டும் உன் கந்தர்வக் குரலில் ஒரு கானம்
இசைத்தால்... ஒரு கானம் இசைத்தால் எருதுக்கும் விருது கிடைக்கும்...
சர்ப்பம் கூட கர்ப்பம் தரிக்கும்... ஏன் நீருக்கும் வியர்க்கும்
என்றது...

அதுக்கப்புறம் என்ன ஆச்சு என்கிறது தான் நமக்கு தெரியுமே...காக்கா பாட்டு
பாடிச்சுது... நரி வடையை எடுத்துக்கிட்டுது...

இல்லை... இந்த இடத்தில் தான் சரித்திரம் சரிகிறது... பூகோளம்
புறள்கிறது...தமிழ் தடுமாறுகிறது... நரியின் தேவ எண்ணத்திலே ஈட்டி
பாய்ந்தது... ஏனென்றால் காகம் என்ன பதில் எடுத்தது தெரியுமா?...

ஏய் நர்த்தக நரியே நான் பாட மாட்டேன்... ஏனென்றால்... நான் வைரமுத்துவின்
வாசலில் வளர்ந்த காகம்... நான் வைரமுத்துவின் வாசலில் வளர்ந்த காகம் ஆகவே
மெட்டு இல்லாமல் பாடமாடேன் என சொல்லி வடையுடன் பறந்து சென்றது...


குழும நண்பர்களே... பாசமுள்ள குழும நண்பர்களே

காகத்தின் உயிரில் வசந்தம் இனித்தது... மனதுக்குள் மழை
பொழிந்த்தது...அங்கே ஆனந்தங்கள் பரவசம்... அனுமதி இலவசம்...

கார்மேக காகத்தின் கதை என்னைப் பொறுத்தவரையில் ஒரு கருவாச்சி காவியம்...
கள்ளிக்காட்டு இதிகாசம்...

பாசமுள்ள குழும நண்பர்களே... உங்கள் பள்ளிகளிலோ... அல்லது
பல்கலைக்கழகங்களிலோ... இந்த கதையை பாடத்திட்டமாக்குவதற்கு பரிந்துரை
செய்யுங்கள்...



X-RAY REPORT
ஆயா  சுட்ட வடை

நடந்தது என்ன??????

ஆராய்கிறார் ஸ்ரீ-லங்காவின் பிரபல இராணுவ  செய்தி ஆய்வாளர்

பாட்டி வடை சுட்ட கதையின் நுண்ணரசியல்



இந்த கதையை மேலோட்டமாக படிக்காமல் உற்று கவனித்தால் இதில்
ஒளிந்திருக்கும் நுண்ணரசியல் புலப்படும். இந்த கதையில் வரும் காக்கா
தலையை பக்கவாட்டில் ஆட்டி வடையை சாப்பிடுவது இது ஒரு சைவ காக்கா என்று
புரிகிறது. தலையை மேலும் கீழும் ஆட்டிய நரி வைணவ சமயத்தை சேர்ந்தது.
அப்பாவி சைவ காக்கையை தந்திர வைணவ நரி ஏமாற்றியது சைவர்களை அப்பாவிகளாக
சித்தரிக்க உதவுகிறது. இதன் மூலம் கதை ஆசிரியர் வைணவத்துக்கு எதிராக
சைவத்தை தூக்கி பிடிக்கிறார் என்று தெரிகிறது. புரிகிறதா தோழ்ர்களே ?


மேலும் இந்த கதையில் கதை முழுவதும் மைய பாத்திரமாக வடை வருகிறது.
முன்பெல்லாம் கதைகளில் வைணவம் அதிகமாக வரும். இந்த கதையில் வரும் வடை சைவ
வடை. குறைந்தபட்சம் இடைவேளைக்கு பின் வடையை வைணவ போண்டா வாக மாற்றி
இருந்தால் கொஞ்சம் நடுநிலை இருந்திருக்கும். மணிரத்னம் கதைகளில் வடை ,
போண்டா இரண்டுமே சமமாக வரும்.


அத்துடன் இரண்டாயிரம் ஆண்டுகளாக நம்மிடையே ஊறிப்போன நிலபிரபுத்துவ
கூறுகளை உள்ளடக்கிய பொதுபுத்தி சிந்தனையின் குறியீடு இந்த வடை. வடை
என்பது எல்லாருக்கும் கிடைக்கும் பொருளும் இல்லை. மேல்தட்டு மற்றும்
நடுத்தட்டு வர்க்கத்தினருக்கு மட்டுமே வடை சாப்பிட சாத்தியப்படும். கதை
ஆசிரியர் தன் வர்க்க நலனை பாதுகாப்பதற்காக இங்கு வடையை உயர்த்தி
பிடிக்கிறார். இது புரியாமல் இந்த கதையை எல்லா வர்க்கத்தினரும்
முட்டாள்தனமாக தங்கள் பேரன் பேத்திக்கு சொல்லி வருகிறார்கள். இந்த
கதையில் பாட்டி என கஞ்சி காய்ச்சி இருக்கக்கூடாதுகஞ்சி குடித்தால்
நரியின் மூக்கு வெந்து விடுமாஇந்த வடை அரசியல் பற்றி 1852 இலேயே
எங்கெல்ஸ் எழுதியிருக்கிறார். புரட்சி வெடித்து தொழிலாள வர்க்கம் ஆட்சியை
கைப்பற்றும்போது கஞ்சி வடையாக மாறும். வடை கஞ்சியாக மாறும். சோவியத்
ரஷ்யாவில் வடை தடை செய்யப்பட்டதை இங்கு நினைவு கூறுங்கள்.






யப்பா வடைக்குள் எவ்வளவு அரசியல்......






3 comments:

Mohamed Faaique said...

நல்லாயிருக்கு. நானும் முன்னடி எங்கேயோ வாசிச்சிருக்கன். எந்த ப்லாக்’ல இருந்து எடுத்தது’னு லின்க் குடுத்திருக்கலாம்...

அசால்ட் ஆறுமுகம் said...

வந்த மின்னஞ்சலிலும் லிங்க் இல்லை... இருந்தால் நிச்சயம் கொடுத்திருப்பேன்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அருமையான ஆக்கம்...

படிக்க சுவாரஸயம்...
தங்களுக்கு வந்ததை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...